கேரளாவில் குண்டு வெடித்த விவகாரம்: சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டதாக 54 வழக்குகள் பதிவு


கேரளாவில் குண்டு வெடித்த விவகாரம்: சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டதாக 54 வழக்குகள் பதிவு
x

வழிபாடு கூட்டரங்கில் குண்டு வெடித்த விவகாரம் குறித்து அனைத்து கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் களமச்சேரி பகுதியில் கிறிஸ்தவ மதவழிபாட்டு கூட்டரங்கில் கடந்த 29-ம் தேதி காலை திடீரென குண்டுவெடிப்பு ஏற்பட்டது. இதில் 3 பேர் உயிரிழந்ததுடன், பலர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் நாடுமுழுவதையும் உலுக்கியுள்ள நிலையில், குண்டு வெடிப்பு குறித்து சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்த என்.ஐ.ஏ மற்றும் தேசிய பாதுகாப்பு படையினருக்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா உத்தரவிட்டுள்ளார்.

மேலும், இந்த சம்பவம் குறித்து அனைத்து கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், திருச்சூர் மாவட்டத்திற்கு உட்பட்ட கொடக்கரா பகுதியில் உள்ள காவல் நிலையத்தில், மார்ட்டின் என்பவர் தானாக சரணடைந்தார். மதவழிபாட்டு கூட்டரங்கில் வெடிகுண்டு வைத்தது நான்தான் எனக்கூறி அவர் சரணடைந்தார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், மத வழிபாடு கூட்டத்தில் குண்டு வெடித்த விவகாரம் தொடர்பாக, மத வன்முறையை தூண்டும் விதமாக சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டதாக 54 வழக்குகளை அம்மாநில போலீசார் பதிவு செய்துள்ளனர். அதிகபட்சமாக மலப்புரம் மாவட்டத்தில் 26 வழக்குகளும், எர்ணாகுளம் மாவட்டத்தில் 15 வழக்குகளும் பதிவாகியுள்ளன.


Next Story