கேரளா: விபத்து ஏற்படுத்தி விட்டு தப்ப முயன்ற பஸ் டிரைவர்... ரெயில் மோதி உயிரிழப்பு


கேரளா:  விபத்து ஏற்படுத்தி விட்டு தப்ப முயன்ற பஸ் டிரைவர்... ரெயில் மோதி உயிரிழப்பு
x

அந்த பகுதி மக்கள் தாக்க கூடும் என்ற அச்சத்தில் பஸ் டிரைவர் ஜீஜித் தப்பியோடி உள்ளார்.

கண்ணூர்,

கேரளாவில் நியூ மாஹி பகுதியருகே சென்று கொண்டிருந்த பஸ் ஒன்று நடந்து சென்ற ஒருவர் மீது மோதி விபத்திற்குள்ளானது. இதில், படுகாயமடைந்த அந்த நபரை சிகிச்சைக்காக அருகேயுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர்.

விபத்து நடந்ததும், அந்த பகுதி மக்கள் தாக்க கூடும் என்ற அச்சத்தில் பஸ் டிரைவர் ஜீஜித் (வயது 44) பஸ்சில் இருந்து கீழே இறங்கி தப்பியோடி உள்ளார்.

அவர் ஓடியபடி அருகே ரெயில் தண்டவாளம் ஒன்றை கடந்து செல்ல முயன்றார். ஆனால், அந்த வழியே வந்த ரெயில் மோதியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்து விட்டார்.


Next Story