பணியில் இருந்தபோது கோவில் திருவிழாவில் நடனமாடிய கேரள போலீஸ்காரர் பணியிடை நீக்கம்


பணியில் இருந்தபோது கோவில் திருவிழாவில் நடனமாடிய கேரள போலீஸ்காரர் பணியிடை நீக்கம்
x
தினத்தந்தி 7 April 2023 8:16 AM IST (Updated: 7 April 2023 8:21 AM IST)
t-max-icont-min-icon

தனது பணிக்கு மாறான செயலில் ஈடுபட்டதற்காக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடுக்கி

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்திற்கு உட்பட்ட சாந்தன்பாறை அருகே உள்ள கிராமத்தல் கோயில் விழா நடைபெற்றது. இதில் பாதுகாப்பு பணிக்காக, உதவி ஆய்வாளர் ஷாஜி தலைமையிலான போலீசார் சென்றனர்.

விழாவில், தமிழ் பக்திப் பாடல் ஒளிபரப்பப்பட்டது. இதையடுத்து, உதவி ஆய்வாளர் ஷாஜி, பரவசத்தில் நடனமாட தொடங்கினார். இதனை அங்கிருந்தவர்கள், தங்கள் செல்போனில் பதிவு செய்து, சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.

இந்த வீடியோ வைரலான நிலையில், ஷாஜியை பணியிடை நீக்கம் செய்து, எர்ணாகுளம் சரக டிஐஜி உத்தரவிட்டுள்ளார். சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கும் காவல் அதிகாரி, தனது பணிக்கு மாறான செயலில் ஈடுபட்டதற்காக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story