கேரளா: ஆற்று வெள்ளத்தில் சிக்கி மூழ்கும் நிலைக்கு சென்ற காட்டுயானை - நெஞ்சை பதறவைக்கும் காட்சி


கேரளா: ஆற்று வெள்ளத்தில் சிக்கி மூழ்கும் நிலைக்கு சென்ற காட்டுயானை - நெஞ்சை பதறவைக்கும் காட்சி
x

கேரளாவில் கனமழையால் ஏற்பட்ட ஆற்றுவெள்ளத்தின் நடுவே காட்டு யானை ஒன்று சிக்கி வெளியேற முடியாமல் தவித்து வருகிறது.

கோழிக்கோடு,

கேரளாவில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது. இதன் காரணமாக அங்குள்ள பெரும்பாலான மாவட்டங்கள் கடும் சேதத்தை சந்தித்து வருகிறது. அங்குள்ள அணைகள் நிரம்பிவிட்ட நிலையில், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

இந்த நிலையில், திருச்சூர் மாவட்டத்தில் பெய்த கனமழையால், சாலக்குடி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், அதிரப்பள்ளி அருகிலுள்ள சாலக்குடியில் ஆற்றின் நடுவில் ஒரு காட்டுயானை ஒன்று வெள்ளத்தில் சிக்கியுள்ளது.

யானை நேற்றே ஆற்றின் நடுவில் சிக்கிய நிலையில், ஆற்றின் மேடான பகுதியில் நின்றுகொண்டிருக்கிறது. வெள்ளப்பெருக்கு அதிகரித்துள்ளதன் காரணமாக யானையால் நிற்கவும் முடியாமல், கரைக்கு வரவும் முடியாமல் தவித்து வருகிறது

கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக யானையை மீட்பதிலும் சிக்கல் நீடித்து வருகிறது. வெள்ளத்தால், வனத்துறையினரலும் யானைக்கு உதவ முடியாமல் தவித்து வருகின்றனர்.


Next Story