காஷ்மீரில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி சுட்டுக்கொலை


காஷ்மீரில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி சுட்டுக்கொலை
x

கோப்புப்படம் 

காஷ்மீரில் ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

ஸ்ரீநகர்,

காஷ்மீரின் சோபியான் மாவட்டம் சோட்டிகம் பகுதியில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் மற்றும் ராணுவ வீரர்கள் குழுவாக இணைந்து நேற்று அதிகாலை அந்த பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் ராணுவ வீரர்களை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதை தொடர்ந்து ராணுவ வீரர்கள் பதில் தாக்குதல் நடத்தினர். இருதரப்புக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். அதனை தொடர்ந்து மற்ற பயங்கரவாதிகள் அங்கிருந்து தப்பி ஓடினர்.

இதனிடையே சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதி லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவர் என்றும், அவர் இளம் ராணுவ அதிகாரியை கடத்தி கொலை செய்தது உள்பட பல்வேறு பயங்கரவாத வழக்குகளில் தொடர்புடையவர் என்றும் போலீசார் தெரிவித்தனர்.


Next Story