வேலையில்லா திண்டாட்டத்துக்கு மத்திய அரசே காரணம்- ப.சிதம்பரம்


வேலையில்லா திண்டாட்டத்துக்கு மத்திய அரசே காரணம்- ப.சிதம்பரம்
x

வேலையில்லா திண்டாட்டத்துக்கு மத்திய அரசே காரணம் என்று முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் சாடி உள்ளார்.

அக்னிவீரர்கள் பணிக்கு 35 லட்சம் பேர்

நாட்டின் வேலையில்லா திண்டாட்ட பிரச்சினைக்கு மத்திய பா.ஜ.க. அரசையும், அதன் கொள்கைகளையும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் தொடர்ந்து சாடி வருகிறது.

அந்தக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் நிதி மந்திரியுமான ப.சிதம்பரம் இது தொடர்பாக டுவிட்டரில் பதிவுகளை வெளியிட்டுள்ளார்.

அவற்றில் அவர் கூறி இருப்பதாவது:-

உத்தரபிரதேச மாநிலத்தில 'சி' பிரிவு வேலைகளுக்கு 37 லட்சம் பேர் விண்ணப்பித்திருக்கிறார்கள். 40 ஆயிரம் அக்னிவீரர்கள் பணியிடங்களுக்கு 35 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். வேலையில்லாத இளைஞர்களின் வேதனைக்குரலை அரசு காது கொடுத்து கேட்கிறதா?

நாங்கள் நம்பிக்கையற்ற நிலையில் உள்ளோம். எங்களுக்கு வேறு வழியில்லை.

8 ஆண்டு பாரம்பரியம்

கடந்த 8 ஆண்டு கால மத்திய அரசின் பாரம்பரியமாக வேலையில்லா திண்டாட்டம் உள்ளது. வேலையில்லா திண்டாட்டத்தின் அளவு 8 சதவீதமாம். இது குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளது.

செப்டம்பர் மாதத்திற்கான மத்திய நிதி அமைச்சக ஆய்வு அறிக்கை, வேலையில்லா திண்டாட்டம் பற்றி ஒரு வார்த்தைகூட குறிப்பிடவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story