திருப்பதி அலிபிரி நடைபாதையில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம் - பக்தர்கள் அச்சம்


திருப்பதி அலிபிரி நடைபாதையில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம் - பக்தர்கள் அச்சம்
x

கோப்புப்படம்

பக்தர்கள் கூட்டமாக நடந்து செல்ல வேண்டும் என்று தேவஸ்தான அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

திருமலை,

திருப்பதி அலிபிரி நடைபாதையில் சிறுத்தைகள், கரடிகள் நடமாட்டம் உள்ளன. ஏற்கனவே கடந்தசில மாதங்களுக்கு முன்பு கர்னூல் மாவட்டம் ஆதோணியைச் சேர்ந்த கவுசிக் என்ற சிறுவன் சிறுத்தை கடித்து காயம் அடைந்தான். அதன் பிறகு நெல்லூரை சேர்ந்த லக்ஷிதா என்ற சிறுமியை சிறுத்தை கடித்துக் கொன்றது.

இந்தச் சம்பவம் தொடர்பாக வனத்துறையினரும், தேவஸ்தானமும் இணைந்து நடைபாதை ஓரம் கூண்டுகள் வைத்து 6 சிறுத்தைகளை பிடித்து வனப்பகுதிக்குள் விட்டனர். தேவஸ்தானம் மற்றும் அரசு வனத்துறை அதிகாரிகள் எவ்வளவோ முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்தாலும், வன விலங்குகள் காட்டில் இருந்து நடைபாதையை நோக்கி வந்து கொண்டே இருக்கின்றன.

இந்த நிலையில், அலிபிரி நடைபாதையில் மீண்டும் சிறுத்தைகள் நடமாடுகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்பு அலிபிரி நடைபாதையில் சிறுத்தை ஒன்று நடமாடியுள்ளது. இதனால் மலைக்கு நடந்து செல்லும் பக்தர்கள் அச்சமடைந்துள்ளனர். சிறுத்தை நடமாட்டம் குறித்து திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் பக்தர்கள் கூட்டமாக நடந்து செல்ல வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.


Next Story