கோவிலில் திருமணம் செய்துகொண்ட லெஸ்பியன் ஜோடி..!!


கோவிலில் திருமணம் செய்துகொண்ட லெஸ்பியன் ஜோடி..!!
x

சில நாட்களுக்கு முன்பு திர்கேஷ்வர்நாத் கோவிலில் தம்பதியருக்கு திருமணத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது.

கோரக்பூர்,

மேற்கு வங்காளத்தை சேர்ந்த லெஸ்பியன் ஜோடி ஒன்று உத்தரப்பிரதேச மாநிலம் தியோரியா மாவட்டத்தில் உள்ள கோவிலில் பாரம்பரிய விழா ஒன்றில் திருமணம் செய்து கொண்டது.

தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயஸ்ரீ ராகுல் (28) மற்றும் ராக்கி தாஸ் (23) ஆகிய இரு பெண்களும் தியோரியாவில் ஒரு இசைக்குழுவில் பணிபுரிகின்றனர், அங்கு அவர்கள் ஒருவரையொருவர் காதலித்தனர். இருவரும் முதலில் தங்கள் திருமணத்திற்கான நோட்டரி சான்றிதழைப் பெற்றனர், பின்னர் அவர்கள் தியோரியாவில் உள்ள பட்பர் ராணியில் உள்ள பகதா பவானி கோவிலில் திங்களன்று நடந்த ஒரு விழாவில் திருமணம் செய்து கொண்டனர்.

சில நாட்களுக்கு முன்பு திர்கேஷ்வர்நாத் கோவிலில் தம்பதியருக்கு திருமணத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது. மாவட்டத்தில் உள்ள உயர் அதிகாரிகளின் அனுமதி இல்லாததைக் காரணம் காட்டி அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.

மனம் தளராத தம்பதியினர், தங்கள் நலம் விரும்பிகளுடன் மாற்று வழி தேடி, திருமணத்துக்கான நோட்டரி சான்றிதழைப் பெற்று, மஜௌலிராஜில் உள்ள பகதா பவானி கோவிலுக்குச் சென்று, கோவில் பூசாரி முன்னிலையில் மாலைகளை மாற்றிக் திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்திற்குப் பின் அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், தம்பதியினர் தங்கள் காதல் கதை எவ்வாறு தொடங்கியது, எவ்வாறு சவால்களை எதிர்கொண்டார்கள், இறுதியில் ஒருவருக்கொருவர் தங்கள் உறுதிப்பாட்டை வலுப்படுத்தினர் என்பது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story