லீக்ஸ் கோப்பை கால்பந்து: இன்டர் மியாமி அணிக்காக அறிமுக போட்டியில் கோல் அடித்தார் மெஸ்சி


லீக்ஸ் கோப்பை கால்பந்து: இன்டர் மியாமி அணிக்காக அறிமுக போட்டியில் கோல் அடித்தார் மெஸ்சி
x

Image Courtacy: AFP

தினத்தந்தி 22 July 2023 8:17 PM GMT (Updated: 23 July 2023 12:15 AM GMT)

லீக்ஸ் கோப்பை கால்பந்து போட்டியில் இன்டர் மியாமி அணிக்காக அறிமுக போட்டியில் மெஸ்சி கோல் அடித்தார்.

புளோரிடா,

லீக்ஸ் கோப்பை கால்பந்து போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் புளோரிடாவில் இந்திய நேரப்படி நேற்று அதிகாலை நடந்த கிரஸ் அசுல் (மெக்சிகோ) அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் இன்டர் மியாமி (அமெரிக்கா) அணிக்காக அர்ஜென்டினா கால்பந்து கேப்டன் லயோனல் மெஸ்சி முதல்முறையாக களம் இறங்கினார்.

பிற்பாதியில் அடியெடித்து வைத்த மெஸ்சி கடைசி நிமிடத்தில் பிரிகிக் வாய்ப்பில் கோல் அடித்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்து அசத்தினார். இந்த ஆட்டத்தில் இன்டர் மியாமி அணி 2-1 என்ற கோல் கணக்கில் கிரஸ் அசுல் அணியை வீழ்த்தியது. கடந்த 2 ஆண்டுகளாக பி.எஸ்.ஜி. கிளப் அணிக்காக ஆடிய மெஸ்சி சமீபத்தில் இன்டர் மியாமி கிளப்பில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story