லிவ்-இன் காதலி மதம் மாற வற்புறுத்தல்; காதலர் தற்கொலை


லிவ்-இன் காதலி மதம் மாற வற்புறுத்தல்; காதலர் தற்கொலை
x

லிவ்-இன் காதலி மதம் மாற வற்புறுத்திய வருத்தத்தில் காதலர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்தூர்,

மத்திய பிரதேசத்தின் இந்தூர் நகரில் ஆசாத் நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜா பவார் (வயது 39). டிரைவராக வேலை செய்து வந்து உள்ளார். இவர் லிவ்-இன் முறையில் காதலியுடன் சில ஆண்டுகளாக ஒன்றாக வாடகை வீட்டில் வசித்து வந்து உள்ளார்.

இந்நிலையில், வீட்டில் தூக்கு போட்ட நிலையில், பவாரின் உடல் கண்டெடுக்கப்பட்டு உள்ளது. இதுபற்றி காவல் துணை ஆய்வாளர் ஹேம்ராஜ் பவார் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காதலி வேற்று மதம் சார்ந்தவர். அவர் பவாரை அவரது மதத்திற்கு மாறும்படி கட்டாயப்படுத்தி வந்துள்ளார் என பவாரின் குடும்பத்தினர் குற்றச்சாட்டாக கூறியுள்ளனர்.

அதனாலேயே மனதளவில் பவார் வருத்தத்துடன் இருந்து வந்துள்ளார் என கூறியுள்ளனர். எனினும், அந்த பகுதியில் இருந்து தற்கொலை குறிப்பு எதுவும் கண்டெடுக்கப்படவில்லை. இதனால், தற்கொலைக்கான சரியான காரணம் என்னவென தெரிய வரவில்லை.

சிலர் பவார் தூக்கில் தொங்கும் நிலையை பார்த்து அவரது குடும்பத்தினரிடம் கூறியுள்ளனர். இதன்பின்னரே அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். எனினும், அதில் பலன் இல்லை.

ராஜா பவாருக்கு முன்பே திருமணம் ஆகி விட்டது என்றும் எனினும் சில ஆண்டுகளாக வேறொரு பெண்ணுடன் ஒன்றாக வாழ்ந்து வருகிறார் என கூறப்படுகிறது. அந்த பெண் வீடு வாங்க பணம் கேட்டு பவாரை வற்புறுத்தி வந்து உள்ளார்.

இதற்காக இருவரும் நேற்று சென்று, வீடு கட்ட பிளாட் ஒன்றை பார்வையிட்டு உள்ளனர். திரும்பி வந்த பின்னரே இந்த சம்பவம் நடந்து உள்ளது என பவாரின் சகோதரர் போலீசிடம் தெரிவித்து உள்ளார். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.


Next Story