எதிர்க்கட்சிகளின் அமளியால் மக்களவை மீண்டும் ஒத்திவைப்பு


எதிர்க்கட்சிகளின் அமளியால் மக்களவை மீண்டும் ஒத்திவைப்பு
x

விலைவாசி உயர்வு உள்பட நாட்டின் பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பாராளுமன்ற மக்களவையில் இன்றும் அமளியில் ஈடுபட்டனர்.

புதுடெல்லி,

விலைவாசி உயர்வு, ஜி.எஸ்.டி. வரி, பணவீக்கம் ஆகியவற்றுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் பாராளுமன்ற இரு அவைகளை கடந்த 4 தினங்களாக முடக்கி இருந்தன.

இந்த நிலையில், விலைவாசி உயர்வு உள்பட நாட்டின் பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பாராளுமன்ற மக்களவையில் இன்றும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் இன்று 2 மணிவரை அவை ஒத்திவைக்கப்பட்டது.

இன்று மதியம் 12 மனிக்கு சபை கூடியதும், எதிர்கட்சியான காங்கிரஸ் மற்றும் இடதுசாரிக் கட்சி உறுப்பினர்கள் பணவீக்க உயர்வுக்கு எதிராக பதாகைகளை ஏந்தியவாறும், முழக்கங்களை எழுப்பியும் அமளியில் ஈடுபட்டனர். அவைத்தலைவரின் முறையீட்டையும் மீறி எதிர்க்கட்சிகளின் போராட்டம் தொடர்ந்ததால், அவை நடவடிக்கைகள் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.


Next Story