மத்திய ஜிஎஸ்டி சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றம்


மத்திய ஜிஎஸ்டி சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றம்
x

ஜிஎஸ்டி மேல்முறையீட்டு தீர்ப்பாய தலைவரின் வயது வரம்பை 67ல் இருந்து 70 ஆக உயர்த்த இந்த மசோதா வகை செய்கிறது.

புதுடெல்லி:

ஜிஎஸ்டி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் வயது வரம்பை உயர்த்த வகை செய்யும், மத்திய சரக்கு மற்றும் சேவை வரி சட்டத்திருத்த (இரண்டாவது திருத்தம்) மசோதாவை மக்களவையில் கடந்த வாரம் புதன்கிழமை, மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்த மசோதா இன்று குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

தீர்ப்பாய தலைவரின் வயது வரம்பை 67ல் இருந்து 70 ஆகவும், உறுப்பினர்களின் வயது வரம்பை 65ல் இருந்து 67 ஆகவும் உயர்த்த இந்த மசோதா வகை செய்கிறது. மறைமுக வரிகள் தொடர்பான வழக்குகளில் 10 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த வழக்கறிஞர், தீர்ப்பாய உறுப்பினராக நியமிக்கத் தகுதியுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story