பீகாரில் பா.ஜனதா-ஐக்கிய ஜனதாதளம் தொகுதி பங்கீடு அறிவிப்பு

பீகாரில் பா.ஜனதா-ஐக்கிய ஜனதாதளம் தொகுதி பங்கீடு அறிவிப்பு
x

மத்திய மந்திரி பசுபதி பராஸ் தலைமையிலான லோக் ஜனசக்தி பிரிவுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக பா.ஜனதா வட்டாரங்கள் தெரிவித்தன.

பாட்னா,

பீகார் மாநிலத்தில் பா.ஜனதா-ஐக்கிய ஜனதாதளம் கூட்டணியின் நாடாளுமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு நிறைவடைந்தது. மொத்தம் உள்ள 40 தொகுதிகளில், பா.ஜனதாவுக்கு 17 தொகுதிகளும், ஐக்கிய ஜனதாதளத்துக்கு 16 தொகுதிகளும், சிராக் பஸ்வான் தலைமையிலான லோக் ஜனசக்தி (ராம்விலாஸ்) கட்சிக்கு 5 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்துஸ்தான் அவாம் மோர்ச்சா, உபேந்திர குஷ்வாகா தலைமையிலான ராஷ்டிரீய லோக் மோர்ச்சா ஆகியவை தலா ஒரு தொகுதியில் போட்டியிடும் என்று பீகாருக்கான பா.ஜனதா தேர்தல் பொறுப்பாளர் வினோத் தாவ்டே நிருபர்களிடம் கூறினார்.

மத்திய மந்திரி பசுபதி பராஸ் தலைமையிலான லோக் ஜனசக்தி பிரிவுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக பா.ஜனதா வட்டாரங்கள் தெரிவித்தன.

Next Story