டயர் வெடித்து லாரி கவிழ்ந்தது; தமிழக டிரைவர் உயிர் தப்பினார்


டயர் வெடித்து லாரி கவிழ்ந்தது; தமிழக டிரைவர் உயிர் தப்பினார்
x
தினத்தந்தி 18 Jan 2023 12:15 AM IST (Updated: 18 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

மங்களூருவில் இருந்து கேரளாவுக்கு சிமெண்டு மூட்டைகளை ஏற்றி கொண்டு சென்ற லாரி, டயர் வெடித்து கவிழ்ந்த விபத்தில் தமிழக டிரைவர் உயிர் தப்பினார்.

மங்களூரு:

மங்களூருவில் இருந்து கேரளாவுக்கு சிமெண்டு மூட்டைகளை ஏற்றி கொண்டு சென்ற லாரி, டயர் வெடித்து கவிழ்ந்த விபத்தில் தமிழக டிரைவர் உயிர் தப்பினார்.

டயர் வெடித்து

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூருவில் தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இந்த நிலையில் அந்த சாலையில் சிமெண்டு மூட்டைகளை ஏற்றி கொண்டு லாரி ஒன்று சென்றது. அந்த லாரி, ெஜப்பினமொகரு பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்ேபாது திடீரென லாரியின் முன்பக்க டயர் வெடித்தது. இதனால் லாரி, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தறிகெட்டு ஓடியது. டிரைவர் லாரியை கட்டுக்குள் கொண்டுவர முயன்றார்.

எனினும், லாரி கட்டுப்பாட்டை முழுவதுமாக இழந்து சாலையில் உருண்டு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் லாரியின் இடிபாடுகளில் சிக்கி டிரைவர் படுகாயம் அடைந்தார். லாரி கிளீனர், விபத்து ஏற்படும் முன்பு குதித்து தப்பினார். இதற்கிடையே அந்த பகுதி வழியாக சென்றவர்கள், உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டனர். மேலும், இதுகுறித்து மங்களூரு புறநகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர்.

டிரைவர் படுகாயம்

இதில் இடிபாடுகளில் சிச்கிய லாரி டிரைவரை மீட்டனர். பின்னர் முதலுதவி சிகிச்கை அளிக்கப்பட்டது. அதையடுத்து அவரை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் விபத்தில் சிக்கியவர் தமிழ்நாட்டை சேர்ந்த டிரைவர் நாகராஜ் என்பதும், அவர் மங்களூருவில் இருந்து கேரளாவுக்கு லாரியில் சிமெண்டு மூட்டைகளை எடுத்து சென்றதும் தெரிந்தது.

மேலும், நீண்ட நேரம் லாரி இயக்கப்பட்டதால், வெப்பக்காற்று காரணமாக டயர் வெடித்ததும், இதனால் லாரி விபத்தில் சிக்கியதும் தெரிந்தது. இதையடுத்து சாலையில் கவிழ்ந்த லாரியை பொக்லைன் எந்திரம் உதவியுடன் சாலையோரம் அகற்றி போக்குவரத்தை சரிசெய்தனர். இந்த விபத்தில் நெடுஞ்சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story