மத்திய பிரதேசம்: 3.5 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்; மாமா கைது
மத்திய பிரதேசத்தில் 3.5 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த மாமாவை போலீசார் கைது செய்து உள்ளனர்.
இந்தூர்,
மத்திய பிரதேசத்தின் இந்தூர் நகரில் சான்யோகீதாகஞ்ச் பகுதியில் வீட்டுக்கு வெளியே மூன்றரை வயது சிறுமி விளையாடி கொண்டு இருந்தபோது, அந்த வழியே சிறுமியின் மாமா வந்து உள்ளார்.
சிறுமியை தனியான ஒரு பகுதிக்கு கொண்டு சென்று, பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டு உள்ளார். இதன்பின்பு, சிறுமியின் சகோதரர் வந்ததும், மாமா அந்த பகுதியில் இருந்து தப்பியோடி விட்டார்.
இதன்பின்னர் பெற்றோரிடம் சிறுமி விவரங்களை கூறியதும், அவர்கள் பதறிபோய் உடனடியாக போலீசில் புகார் அளித்து உள்ளனர். இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த நபரை கைது செய்து உள்ளனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
Related Tags :
Next Story