ம.பி.யில் மீண்டும் ஆட்சியமைத்தால்... முக்கிய வாக்குறுதிகளுடன் தேர்தல் அறிக்கை வெளியிட்டது பாஜக


ம.பி.யில் மீண்டும் ஆட்சியமைத்தால்... முக்கிய வாக்குறுதிகளுடன் தேர்தல் அறிக்கை வெளியிட்டது பாஜக
x
தினத்தந்தி 11 Nov 2023 10:24 AM GMT (Updated: 11 Nov 2023 10:27 AM GMT)

ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்களுக்கு முதுநிலைப் பட்டப்படிப்பு வரை இலவச கல்வி வழங்கப்படும் என பாஜக தெரிவித்துள்ளது.

மத்திய பிரதேசத்தில் வரும் 17ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் பிரசாரம் தீவிரமடைந்துள்ளது. மக்களிடையே பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி ஓட்டு சேகரித்து வருகின்றன.

இந்நிலையில், ஆளுங்கட்சியான பாஜக இன்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மாநில முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான், மாநில பாஜக தலைவர் வி.டி.சர்மா ஆகியோர் தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர்.

அதில் பல்வேறு வாக்குறுதிகள் மற்றும் செயல்திட்டங்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்களுக்கு முதுநிலைப் பட்டப்படிப்பு வரை இலவச கல்வி வழங்கப்படும், கோதுமை ஒரு குவிண்டால் ரூ.2,700க்கும், நெல் ரூ.3,100க்கும் கொள்முதல் செய்யப்படும், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ஏழைகளுக்கு இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்படும், லட்லி பெஹ்னா யோஜனா மற்றும் உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்கு ரூ.450க்கு சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

மத்திய பிரதேச தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் மத்திய பிரதேச மருத்துவ அறிவியல் நிறுவனம் ஆகியவற்றை கட்ட உள்ளதாகவும் வாக்குறுதி கொடுத்துள்ளது.


Next Story