மத்தியப் பிரதேசம்: ஸ்கூட்டர் மீது லாரி மோதி விபத்து - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி
மத்தியப் பிரதேசத்தில் ஸ்கூட்டர் மீது லாரி மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தாதியா,
மத்தியப் பிரதேசத்தில் ஸ்கூட்டர் மீது லாரி மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மத்தியப் பிரதேச மாநிலம் தாதியா மாவட்டத்திற்கு தீபாவளி கொண்டாட்டத்திற்காக இருசக்கர வாகனத்தில் இரண்டு குழந்தைகள் உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் சென்று கொண்டிருந்தனர்.
கோரகாட் காவல் நிலையப் பகுதியில் உள்ள சீதாபூர் மற்றும் உபரியா கிராமங்களுக்கு இடையே சென்று கொண்டிருந்த போது அவர்கள் ஸ்கூட்டர் மீது லாரி ஒன்று மோதியது. இந்த விபத்தில் 4 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
தப்பி ஓடிய லாரி ஓட்டுநர், சிருலா பகுதியில் உள்ள சுங்கச் சாவடி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக காவல்துறை கண்காணிப்பாளர் அமன் சிங் ரத்தோர் தெரிவித்தார்.
மேலும், உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.