மத்திய பிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தல் - வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது
மத்திய பிரதேச மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது.
போபால்,
மத்திய பிரதேச மாநிலத்தில் அடுத்த மாதம் 17-ந்தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு மொத்தம் உள்ள 230 தொகுதிகளுக்கும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை அறிவித்துள்ளது. பா.ஜ.க. முதற்கட்டமாக 90 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது.
மாநிலம் முழுவதும் தீவிர தேர்தல் பிரச்சாரம் நடந்து வரும் நிலையில், தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியுள்ளது. இதே போன்று சத்தீஷ்கார் மாநிலத்தில் 2-ம் கட்ட சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது. அங்கு மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் 20 தொகுதிகளுக்கு முதற்கட்டமாக நவம்பர் 7-ந்தேதியும், 2-ம் கட்டமாக 70 தொகுதிகளுக்கு நவம்பர் 14-ந்தேதியும் தேர்தல் நடைபெறுகிறது.
Related Tags :
Next Story