காட்டுத்தீயை ஏற்படுத்திய விவசாயிக்கு நூதன தண்டனை விதித்து மராட்டிய கோர்ட்டு உத்தரவு


காட்டுத்தீயை ஏற்படுத்திய விவசாயிக்கு நூதன தண்டனை விதித்து மராட்டிய கோர்ட்டு உத்தரவு
x

கோப்புப்படம்

தற்செயலாக பெரும் காட்டுத்தீயை ஏற்படுத்திய விவசாயிக்கு, 1,000 மரக்கன்றுகளை நட்டு, அவற்றை பராமரிக்கும்படி, மராட்டிய கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மும்பை,

மராட்டியத்தில் தற்செயலாக பெரும் காட்டுத்தீயை ஏற்படுத்திய விவசாயிக்கு, 1,000 மரக்கன்றுகளை நட்டு, அவற்றை பராமரிக்கும்படி, மராட்டிய கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து வனத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "ஏப்ரல் மாதம் சதாரா மாவட்டத்தில் உள்ள நந்த்காவ்ன் கிராமத்தில் வசிக்கும் சுபாஷ் ராம்ராவ் பாட்டீல் என்ற விவசாயி, தனது பண்ணையில் கரும்புகளை தீ வைத்து எரித்ததாக இந்திய வனச்சட்டத்தின் கீழ் புகார் அளிக்கப்பட்டது. பலத்த காற்று காரணமாக, அருகில் இருந்த வனப்பகுதிக்கும் தீ பரவியது.

இந்த தீயின் காரணமாக காட்டில் இருந்த பனியன், பீப்பல், செனகாலியா கேட்சு (கைர்), வேம்பு, கஞ்சன் மற்றும் கரஞ்சா (மில்லட்டியா பின்னேட்டா) ஆகிய 1,622 முழுமையாக வளர்ந்த மரங்கள் தீயில் முற்றிலும் எரிந்து நாசமானது. மேலும், பெரிய நிலப்பரப்பில் உள்ள புற்களும் சேதமடைந்துள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

விசாரணையின் போது, ​​பாட்டீல் கராட் தாலுகாவில் உள்ள முதல் வகுப்பு கோர்ட் முன்பு தனது தவறை ஒப்புக்கொண்டார். ஆனால் காட்டுத்தீயை ஏற்படுத்துவது தனது நோக்கம் அல்ல என்றும், தவறுதலாக தீ பரவிவிட்டது என்றும் அவர் வாதிட்டார்.

இதையடுத்து அவருக்கு 5 ஆயிரம் அபராதம் செலுத்த வேண்டும், மேலும் 1000 மரக்கன்றுகளை நட்டு, அவற்றை பராமரிக்கும்படி, நீதிபதி உத்தரவிட்டார்.


Next Story