மராட்டிய மாநிலம்: ரெயிலில் பயணித்த பெண் பாலியல் பலாத்காரம் - போலீஸ் விசாரணை


மராட்டிய மாநிலம்: ரெயிலில் பயணித்த பெண் பாலியல் பலாத்காரம் - போலீஸ் விசாரணை
x

ரெயிலில் பயணித்த பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மும்பை,

மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் உள்ள ரெயில்வே காவல்நிலையத்தில் கடந்த ஏப்ரல் மாதம் பெண் ஒருவர் புகார் ஒன்றை அளித்திருந்தார். அந்த புகாரில், உத்தர பிரதேசத்திற்கு செல்லும் துளசி எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்து கொண்டிருந்தபோது, தன்னை ஒரு அடையாளம் தெரியாத நபர் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாக அந்த பெண் கூறியிருந்தார்.

அந்த பெண் அளித்த புகாரில், கடந்த மார்ச் 10-ந்தேதி, மராட்டிய மாநிலம் மும்பை அருகே உள்ள லோக்மானியா திலக் ரெயில் நிலையத்தில் இருந்து தானே ரெயில் நிலையத்திற்கு ரெயிலில் பயணம் செய்தபோது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தனக்கு மயக்க மருந்து கொடுத்து தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து விசாரணை நடத்திய குவாலியர் ரெயில்வே போலீசார், 21 நாட்களுக்குப் பிறகு இந்த புகாரை தானே ரெயில்வே காவல்நிலையத்திற்கு மாற்றம் செய்தனர். இதையடுத்து தானே ரெயில்வே போலீசார், 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, சம்பந்தப்பட்ட ரெயில் நிலையங்களில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகள், குறிப்பிட்ட தேதியில் முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகள் மற்றும் செல்போன் அழைப்புகள் ஆகியவற்றை ஆய்வு செய்து குற்றவாளியை தீவிரமாக தேடி வருகின்றனர்.


Next Story