அடுத்த மாதம் தமிழகம் வருகிறார் மல்லிகார்ஜுன கார்கே
கூட்டணி, தொகுதி பங்கீடு உள்ளிட்டவை குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர்களுடன் கார்கே ஆலோசனை நடத்தவுள்ளார்.
புதுடெல்லி,
நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுதொடர்பான தேர்தல் அட்டவணையை பிப்ரவரி மாத இறுதி அல்லது மார்ச் மாதத்தில் வெளியிட தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது. நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்கான பணிகளில் அனைத்துக் கட்சிகளும் மும்முரமாக இறங்கியுள்ளன. மேலும் தேர்தல் பணிகளை கவனிப்பதற்காக தனியாக நிர்வாகிகள் நியமிக்கப்படுகிறார்கள்.
இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தல் பணிகள் தொடர்பாக ஆலோசனை நடத்த அடுத்த மாதம் (பிப்ரவரி) 13ம் தேதி அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தமிழகம் வருகிறார்.
கூட்டணி, தொகுதி பங்கீடு உள்ளிட்டவை குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர்களுடன் கார்கே ஆலோசனை நடத்தவுள்ளார்.
Related Tags :
Next Story