'ஜி-20' மாநாடு: ஜனாதிபதி மாளிகை விருந்தில் பங்கேற்கிறார் மம்தா பானர்ஜி..!


ஜி-20 மாநாடு: ஜனாதிபதி மாளிகை விருந்தில் பங்கேற்கிறார் மம்தா பானர்ஜி..!
x

Image Courtacy: PTI

‘ஜி-20’ மாநாடு ஜனாதிபதி மாளிகை விருந்தில் மம்தா பானர்ஜி பங்கேற்க உள்ளார்.

கொல்கத்தா,

'ஜி-20' மாநாட்டில் பங்கேற்கும் உலக நாடுகளின் தலைவர்கள் உள்ளிட்ட விருந்தினர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகிற 9-ந்தேதி இரவு விருந்து அளிக்கிறார்.

இந்த நிலையில் ஜனாதிபதி மாளிகையில் நடைபெறும் 'ஜி-20' விருந்தில் மேற்குவங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கலந்துகொள்வார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. ஜனாதிபதி திரவுபதி முர்முவின் அழைப்பின் பேரில் மம்தா இந்த விருந்தில் கலந்துகொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

'ஜி-20' மாநாட்டில் பங்கேற்கும் வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனாவை சந்திக்கவும், அவருடன் உரையாடும் வாய்ப்பு கிடைக்கும் என்பதற்காகவும் இரவு விருந்தில் கலந்துகொள்ளும் முடிவை மம்தா எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக 'ஜி-20' இரவு விருந்துக்கான அழைப்பிதழில் இந்தியா என்ற வார்த்தைக்கு பதிலாக பாரத் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டதற்கு மம்தா பானர்ஜி உள்பட எதிர்க்கட்சி தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.


Next Story