மும்பை ரெயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது


மும்பை ரெயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது
x

மும்பை ரெயிலில் தொடர் குண்டுவெடிப்பு நடத்தப்போவதாக மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது செய்தனர்.

மும்பை,

மும்பை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு இன்று காலை மர்ம நபர் ஒருவர் அழைப்பு விடுத்து மும்பை புறநகர் ரெயிலில் தொடர் குண்டுவெடிப்பு நடத்தப்போவதாக மிரட்டல் விடுத்தார். இதையடுத்து உடனடியாக அந்த மொபைல் எண்ணை வைத்து மிரட்டல் விடுத்த நபரின் இருப்பிடத்தை போலீசார் கண்டுபிடித்தனர்.

மும்பையில் உள்ள ஜுகு பகுதியில் இருந்து அழைப்பு வந்தது தெரியவந்ததும், போலீசார் அங்கு சென்று மிரட்டல் விடுத்த நபரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபர் 25 வயது இளைஞர் என்பதும், அவர் பீகாரில் இருந்து 10 நாட்களுக்கு முன்புதான் மும்பைக்கு வந்துள்ளார் என்பதும் தெரிய வந்துள்ளது.

காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு அழைப்பு விடுத்தபோது அந்த நபர் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. மிரட்டல் விடுப்பதற்காக அவர் பயன்படுத்திய செல்போனை பறிமுதல் செய்த போலீசார், தொடர்ந்து இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story