கடைசியாக மனைவியின் குரலை கேட்க போன் செய்த கணவன்... சில நிமிடங்களில் தற்கொலை செய்து கொண்ட சோகம்


கடைசியாக மனைவியின் குரலை கேட்க போன் செய்த கணவன்... சில நிமிடங்களில் தற்கொலை செய்து கொண்ட சோகம்
x

சுதாகர் அவரது மனைவிக்கு போன் செய்து கடைசியாக இரண்டு நிமிடம் உன் குரலை கேட்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

தானே,

மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள டோம்பிவலியைச் சேர்ந்தவர் சுதாகர் யாதவ் (41 வயது). அவரது மனைவி சஞ்சனா யாதவ் (31 வயது). இருவருக்கும் இடையே கடந்த 19-ந்தேதி சண்டை வந்துள்ளது. இதையடுத்து சஞ்சனா தனது சகோதரி வீட்டுக்குச் சென்று அங்கு தங்கியுள்ளார்.

இந்த நிலையில் மறுநாள் காலை 10 மணியளவில் சஞ்சனா வேலைக்குச் சென்று கொண்டிருந்த போது, சுதாகர் அவருக்கு போன் செய்து கடைசியாக இரண்டு நிமிடம் உன் குரலை கேட்க வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் வாட்ஸ்அப்பில் தூக்குப்போடப் போகும் புகைப்படத்தையும் அவருக்கு அனுப்பியுள்ளார்.

இதனால் பதறிப்போன சஞ்சனா, பக்கத்து வீட்டுக்காரருக்கு போன் செய்து தனது வீட்டுக்கு சென்று பார்க்குமாறு கூறியுள்ளார். இதையடுத்து சுதாகரின் வீட்டுக்கு சென்ற அவர் கதவைத் தட்டியுள்ளார். உள்ளேயிருந்து எந்த பதிலும் வரவில்லை. இந்த நிலையில் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது சுதாகர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

இதுகுறித்து விஷ்ணு நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story
  • chat