ரூ.600-க்காக மகளை கழுத்தறுத்து கொன்ற கொடூர தந்தை


ரூ.600-க்காக மகளை கழுத்தறுத்து கொன்ற கொடூர தந்தை
x

கோப்புப்படம் 

உத்தர பிரதேசத்தில் ரூ.600-க்காக மகளை, தந்தை கழுத்தறுத்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஷாஜஹான்பூர்,

உத்தர பிரதேச மாநிலம் கோட்வாலி காவல் நிலையப் பகுதியில் கடந்த வியாழக்கிழமை இரவு, கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பூர்தி குப்தா (24 வயது) என்பவரின் உடல் அவரது வீட்டில் இருந்து மீட்கப்பட்டது. அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தங்கள் மகளை கொலை செய்ததாக அந்த பெண்ணின் பெற்றோர் கூறினர்.

இந்த நிலையில் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு விசாரணை மேற்கொண்டதில், பூர்தி குப்தாவை அவரது தந்தை சஞ்சய் குப்தா கொலை செய்தது தெரிய வந்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு சஞ்சய் குப்தா, பூர்திக்கு ரூ.600 கொடுத்துள்ளார். அந்த ரூ.600 -ஐ திருப்பி தருமாறு அவர் கேட்டுள்ளார். அதற்கு பூர்தி மறுப்பு தெரிவிக்கவே, இதனால் ஆத்திரமடைந்த சஞ்சய், இரவில் பூர்தி தூங்கிக் கொண்டிருந்தபோது அவரது கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.

இதுகுறித்து முழுமையாக அறிந்திருந்தும், பூர்தியின் தாயான வந்தனா குப்தா போலீசாரிடம் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சஞ்சய் குப்தா மற்றும் வந்தனா குப்தாவை கைது செய்துள்ளனர். ரூ.600-க்காக மகளை, தந்தை கழுத்தறுத்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1 More update

Next Story