கோவா விமான நிலையத்திற்கு போதையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது


கோவா விமான நிலையத்திற்கு போதையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது
x

விமான நிலையத்தில் பணிபுரிந்து வந்த குந்தன் என்பவர் போதையில் மிரட்டல் விடுத்தது தெரிந்தது.

பனாஜி,

கோவாவில் மனோகர் சர்வதேச விமான நிலையத்திற்கு தொலைபேசி அழைப்பு மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதனையடுத்து உஷாரான அதிகாரிகள் வெடிகுண்டு தடுப்பு பிரிவினருடன் விமான நிலையத்தை சோதனையிட்டனர்.

மேலும் வாஸ்கோவில் உள்ள டபோலிம் சர்வதேச விமான நிலையத்தையும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வந்தனர். பின்னர் அது புரளி என தெரியவந்தது. விமான நிலையத்தில் பணிபுரிந்து வந்த குந்தன் (வயது 22) என்பவர் போதையில் இந்த மிரட்டல் விடுத்தது தெரிந்தது. அவரை கைது செய்து போலீசார் விசாரிக்கிறார்கள்.


Next Story