மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டம்


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டம்
x
தினத்தந்தி 11 Sept 2023 12:15 AM IST (Updated: 11 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஆண்டர்சன்பேட்டை சர்க்கிளில் விலைவாசி உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

ஆண்டர்சன்பேட்டை

கோலார் மாவட்டம் கோலார் தங்கவயல் ஆண்டர்சன்பேட்டை சர்க்கிளில் நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்திற்கு கவுன்சிலரும், கட்சியின் கோலார் தங்கவயல் தாலுகா செயலாளருமான தங்கராஜ் தலைமை தாங்கினார்.

போராட்டத்தில் கட்சி தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். போராட்டத்தின் போது தங்கராஜ் பேசுகையில், 'நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துகொண்டே போகிறது. அதை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.

நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது. இந்த பிரச்சினையை போக்க கோலார் தங்கவயலில் மூடியுள்ள தங்கச் சுரங்கத்தை மத்திய அரசு உடனே திறக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

பி.இ.எம்.எல். தொழிற்சாலையில் பல ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றுவோரை நிரந்தமாக்க வேண்டும். தங்கச் சுரங்க பகுதியில் வசிக்கும் அனைத்து வீடுகளையும் அவர்களுக்கே சொந்தமாக வழங்க வேண்டும்' என்றார். மேலும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.


Next Story