அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு: மத்திய அரசு மீது மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு


அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு: மத்திய அரசு மீது மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு
x

கோப்புப்படம்

கொள்ளை அடிப்பதில் பா.ஜனதா தேர்ச்சி அடைந்து உள்ளது என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

நாடு முழுவதும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து வருவதை குறிப்பிட்டு மத்திய அரசை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே சாடியுள்ளார். குறிப்பாக, 'வளர்ந்த இந்தியா' என்ற பெயரில் மத்திய அரசு யாத்திரை நடத்தி வரும் நிலையில், அதை சுட்டிக்காட்டி அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில், 'பணவீக்கம். என்ன மாதிரியான வளர்ந்த இந்தியா இது? கொள்ளை அடிப்பதில் பா.ஜனதா தேர்ச்சி அடைந்து உள்ளது' என சாடியுள்ளார். மேலும், பால், வெங்காயம், தக்காளி, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் 2014-ம் ஆண்டு விலையையும், தற்போதைய விலையையும் ஒப்பிட்டு வெளியாகி இருக்கும் வீடியோ பதிவு ஒன்றையும் அவர் வெளியிட்டு இருந்தார்.



1 More update

Next Story