டெல்லியில் பள்ளி மாணவர்கள் மீது மனநலம் பாதிக்கப்பட்ட நபர் கத்திக்குத்து தாக்குதல்


டெல்லியில் பள்ளி மாணவர்கள் மீது மனநலம் பாதிக்கப்பட்ட நபர் கத்திக்குத்து தாக்குதல்
x
கோப்புப்படம் 

கத்திக்குத்து தாக்குதல் நடத்திய நபரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து கடுமையாக தாக்கியுள்ளனர்.

புதுடெல்லி,

டெல்லியில் உள்ள நரேலா பகுதியில் 2 பள்ளி மாணவர்கள் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்த மாணவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனிடையே கத்திக்குத்து தாக்குதல் நடத்திய நபரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து கடுமையாக தாக்கியுள்ளனர். இதனால் அந்த நபருக்கும் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், அவரை போலீசார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

தாக்குதல் நடத்திய நபரின் பெயர் வினய்(23) என்பதும், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும், தொடர்ந்து இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.


Next Story