மெட்ரோ ரெயில் நிலையங்களின் பெயர்கள் மாற்றம்


மெட்ரோ ரெயில் நிலையங்களின் பெயர்கள் மாற்றம்
x
தினத்தந்தி 25 March 2023 6:45 PM GMT (Updated: 25 March 2023 6:46 PM GMT)

கே.ஆர்.புரம்-ஒயிட்பீல்டு இடையேயான மெட்ரோ ரெயில் நிலையங்களின் பெயர்கள் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

பெங்களூரு:

பெங்களூருவில் சாலை போக்குவரத்தை குறைக்கும் நோக்கில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. கெங்கேரி முதல் பையப்பனஹள்ளி வரை இயக்கப்பட்டு வரும் மெட்ரோ சேவையை ஒயிட்பீல்டு வரை விரிவுபடுத்த முடிவு செய்யப்பட்டது. இதற்கான பணிகளை மெட்ரோ அதிகாரிகள் செய்து வந்தனர். தற்போது கே.ஆர்.புரம்-ஒயிட்பீல்டு இடையேயான பணிகள் நிறைவு பெற்றது.நேற்று பிரதமர் மோடி இந்த வழித்தடத்தில் மெட்ரோ ரெயில் சேவையை தொடங்கி வைத்தார்.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் வழக்கம் போல் கே.ஆர்.புரம்-ஒயிட்பீல்டு இடையே மெட்ரோ வழித்தடத்தில் பயணிகள் போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட உள்ளது. இந்த நிலையில் கே.ஆர்.புரம் முதல் ஒயிட்பீல்டு இடையேயான மெட்ரோ நிலையங்களில் பெயர்களை பெங்களூரு மெட்ரோ நிர்வாகம் மாற்றம் செய்துள்ளது. இதுகுறித்து அந்த நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கே.ஆர்.புரம்-ஒயிட்பீல்டு இடையே புதிதாக மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி கே.ஆர்.புரம் ரெயில் நிலையம் இனி கிருஷ்ணராஜபுரா எனவும், காடுகோடி ரெயில் நிலையம்- காடுகோடி ட்ரீ பார்க் எனவும், மகாதேவபுரா ரெயில் நிலையம்-சிங்கேயப்பாளையா எனவும், சன்னசந்திரா ரெயில் நிலையம்- சன்னசந்திரா ஹோப் பார்ம் எனவும், ஒயிட்பீல்டு ரெயில் நிலையம் இனி ஒயிட்பீல்டு(காடுகோடி) எனவும் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டது.


Next Story