பாஜக நிர்வாகியை அடித்துக்கொன்று உடலை ஆற்றில் வீசிய கணவன் - அதிர்ச்சி சம்பவம்


பாஜக நிர்வாகியை அடித்துக்கொன்று உடலை ஆற்றில் வீசிய கணவன் - அதிர்ச்சி சம்பவம்
x

பாஜக நிர்வாகியை அடித்துக்கொன்ற கணவன் உடலை ஆற்றில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை,

மராட்டிய மாநிலம் நாக்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சனாகான். இவர் நாக்பூர் பாஜக சிறுபான்மை பிரிவு தலைவியாக உள்ளார். சனாகான் கணவர் அமித் சாஹு.

இதனிடையே, சனாகான் கடந்த சில நாட்களுக்கு முன் நாக்பூரில் இருந்து மத்தியபிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள கணவர் அமித் சாஹு வீட்டிற்கு சென்றுள்ளார். அதன்பின்னர் அவர் நாக்பூர் திரும்பவில்லை. மேலும், அவரை செல்போனில் தொடர்புகொள்ளவும் முடியவில்லை.

இதனால் சந்தேகமடைந்த சனாகானின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் நாக்பூர் மற்றும் ஜபல்பூர் போலீசார் இணைந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், சனாகானை அவரது கணவர் அமித் சாஹுவே அடித்துக்கொலை செய்து உடலை ஜபல்பூரில் உள்ள ஆற்றில் வீசியது விசாரணையில் தெரியவந்துள்ளது. ஜபல்பூரில் அமித் சட்டவிரோதமாக மதுபான கடத்தலில் ஈடுபட்டு வருகிறார். மேலும், சாலையோர உணவகமும் நடத்தி வருகிறார்.

இதனிடையே, சனா கானுக்கும் அவரது கணவர் அமித் சாஹூவுக்கும் பண விவகாரத்தில் பிரச்சினை நிலவி வந்துள்ளது. சனா கான் ஜபல்பூரில் உள்ள அமித் சாஹூ வீட்டிற்கு வந்தபோது இவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் அமித் சாஹூ தனது மனைவி சனாகானை அடித்துக்கொன்றுள்ளார்.

பின்னர், தன் மனைவியிடன் உடலை நண்பர்கள் உதவியுடன் அமித்சாஹூ அப்பகுதியில் உள்ள ஹிரன் ஆற்றில் வீசியுள்ளார். இதனை தொடந்து அமித் சாஹூ மற்றும் அவரது நண்பர்களை கைது செய்த போலீசார் ஆற்றில் வீசப்பட்ட சனா கானின் உடலை தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story