ராஜஸ்தான் : ராஜ்ய சபா தோ்தலில் கட்சி மாறி ஒட்டு போட்ட எம்.எல்.ஏ விளக்கம் அளிக்க பாஜக தலைமை நோட்டீஸ்


ராஜஸ்தான் : ராஜ்ய சபா தோ்தலில் கட்சி மாறி ஒட்டு போட்ட எம்.எல்.ஏ விளக்கம் அளிக்க பாஜக தலைமை நோட்டீஸ்
x
தினத்தந்தி 11 Jun 2022 5:41 AM GMT (Updated: 11 Jun 2022 8:28 AM GMT)

ராஜ்ய சபா தோ்தலில் பாஜக எம்.எல்.ஏ. ஷோபா ராணி காங்கிரஸ் கட்சி வேட்பாளருக்கு வாக்களித்தாா்.

ஜெய்ப்பூர்,

மாநிலங்களவை தேர்தலில் ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி 3 இடங்களைக் கைப்பற்றியது. ஒரு இடத்தை பாஜக வென்றுள்ளது. இதன்படி காங்கிரஸ் கட்சியின் முகுல் வாஸ்னிக், ரந்தீப் சிங் சுர்ஜேவாலா, பிரமோத் திவாரி ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனா்.

பாஜகவின் கன்ஷியாம் திவாரி வெற்றி பெற்றுள்ள நிலையில், பாஜக ஆதரவு பெற்ற சுயேட்சை வேட்பாளர் சுபாஷ் சந்திரபோஸ் தோல்வியடைந்துள்ளார். இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலங்களவைத் தேர்தலில் பாஜக எம்.எல்.ஏ. ஷோபாராணி குஷ்வா கட்சி மாறி, காங்கிரஸ் வேட்பாளர் பிரமோத் திவாரிக்கு வாக்களித்ததையடுத்து, அவர் பாஜக கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் கொறடா உத்தரவை மீறி வாக்களித்தது குறித்து விளக்கம் அளிக்குமாறு பாஜக மத்திய ஒழுங்குக் குழு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.


Next Story