ஓட்டு வங்கிக்காக கவர்ச்சிகரமான முடிவுகளை எடுக்க மாட்டோம் - அமித்ஷா


ஓட்டு வங்கிக்காக கவர்ச்சிகரமான முடிவுகளை எடுக்க மாட்டோம் - அமித்ஷா
x

ஓட்டு வங்கியை மனதில் வைத்து, நாங்கள் ஒருபோதும் கவர்ச்சிகரமான முடிவுகளை எடுத்தது இல்லை என அமித்ஷா பேசினார்.

டெல்லியில், தொழில்துறை அமைப்பான 'அசோசாம்' ஏற்பாடு செய்த வருடாந்திர கூட்டத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்டார்.

அங்கு அவர் பேசியதாவது:-

ஒட்டுமொத்த அரசின் அணுகுமுறையால் மட்டுமே இந்தியா போன்ற பெரிய நாட்டில் வளர்ச்சி சாத்தியமாகும். இதை உணர்ந்து பிரதமர் மோடி, ஒட்டுமொத்த அரசின் செயல்பாட்டையும் களத்தில் ஈடுபடுத்துகிறார். அதனால்தான் கடந்த 9 ஆண்டுகளில் ஒவ்வொரு துறைகளிலும் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. ஓட்டு வங்கியை மனதில் வைத்து, நாங்கள் ஒருபோதும் கவர்ச்சிகரமான முடிவுகளை எடுத்தது இல்லை. நாட்டு நலனையும், மக்களுக்கு எது நல்லது என்பதையும் பார்த்துத்தான் முடிவு எடுக்கிறோம்.

இல்லாவிட்டால், ஜி.எஸ்.டி.யே வந்திருக்காது. சிலர் அதை 'கப்பர்சிங் வரி' என்று கூறுகிறார்கள். எங்களுக்கு அதைப்பற்றி கவலை இல்லை.

ஒரு குழந்தைக்கு மலேரியா வந்தால், டாக்டர் 'குய்னைன்' என்ற மாத்திரையை எழுதித்தருவார். அதை சாப்பிடும்போது, கசப்புத்தன்மையால் குழந்தை அழும். ஆனால், மலேரியா குணமான பிறகு குழந்தை சிரிக்கும். அதுபோல், மத்திய அரசு எடுத்த சங்கடமான, அனைவரையும் உள்ளடக்கிய திட்டங்கள், அனைத்து துறை வளர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன. எங்கள் சித்தாந்தம், இந்தியாவை பாதுகாப்பாக மாற்றி உள்ளது. எங்கள் திட்டங்கள், உலகத்தையே ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story