தலைமைச் செயலாளர்களின் 3-வது தேசிய மாநாடு: தலைமை தாங்குகிறார் பிரதமர் மோடி
3-வது தேசிய மாநாடு வருகிற 27 முதல் 29-ந் தேதி வரை டெல்லியில் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
புதுடெல்லி,
மத்திய-மாநில அரசுகளுக்கு இடையேயான கூட்டாட்சியை வலுப்படுத்தும் நோக்கில் தலைமை செயலாளர்கள் மாநாடு நடத்தப்படுகிறது. இதன் முதல் மாநாடு கடந்த ஆண்டு ஜூன் மாதம் பஞ்சாப்பிலும், 2-வது மாநாடு கடந்த ஜனவரி மாதம் டெல்லியிலும் நடத்தப்பட்டது.
இந்த நிலையில் தலைமை செயலாளர்களின் 3-வது மாநாடு வருகிற 27 முதல் 29-ந் தேதி வரை டெல்லியில் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் மத்திய அமைச்சகங்களை சேர்ந்த அதிகாரிகள், மாநிலங்களின் தலைமை செயலாளர்கள், யூனியன் பிரதேசங்களின் மூத்த அதிகாரிகள் மற்றும் மாவட்ட கலெக்டர்கள், நீதிபதிகள் உள்ளிட்டோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Related Tags :
Next Story