நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்; பா.ஜ.க. நாடாளுமன்ற கட்சி கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் மோடி வருகை


நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்; பா.ஜ.க. நாடாளுமன்ற கட்சி கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் மோடி வருகை
x
தினத்தந்தி 25 July 2023 10:10 AM IST (Updated: 25 July 2023 10:44 AM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை முன்னிட்டு பா.ஜ.க. நாடாளுமன்ற கட்சி கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று வருகை தந்துள்ளார்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 20-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. வருகிற ஆகஸ்டு 11-ந்தேதி வரை கூட்டத்தொடர் 21 அமர்வுகளாக நடைபெறும். கடந்த 3 நாட்களாக நடந்த கூட்டத்தொடரில் மணிப்பூர் சம்பவம் உள்ளிட்ட விவகாரங்களால் அமளி ஏற்பட்டு, அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.

இந்த நிலையில், இன்று 4-வது நாள் கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் தினமும் நாடாளுமன்றம் முடங்கி வரும் சூழலில், பா.ஜ.க. நாடாளுமன்ற கட்சி கூட்டம் இன்று நடைபெறுகிறது.

இதில், கலந்து கொள்ள பிரதமர் மோடி, மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங், மத்திய சுகாதார துறை மந்திரி மன்சுக் மாண்டவியா உள்ளிட்ட அக்கட்சியின் தலைவர்கள் வருகை தந்தனர். இதில், நாடாளுமன்றம் சுமுகமுடன் நடைபெறுவதற்கான விசயங்கள் பற்றி ஆலோசிக்கப்படும் என கூறப்படுகிறது.

1 More update

Next Story