மேகாலயாவைச் சேர்ந்த எம்.பி. இஸ்ரேலில் குடும்பத்துடன் சிக்கித் தவிப்பு..!


மேகாலயாவைச் சேர்ந்த எம்.பி. இஸ்ரேலில் குடும்பத்துடன் சிக்கித் தவிப்பு..!
x

மேகாலயாவைச் சேர்ந்த தேசிய மக்கள் கட்சி எம்.பி. இஸ்ரேலில் தனது குடும்பத்துடன் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஷில்லாங்,

காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் பயங்கரவாத குழு இஸ்ரேல் மீது நடத்திய திடீர் ஏவுகணை தாக்குதலால் இஸ்ரேலில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அங்குள்ள இந்தியர்களை பாதுகாப்பாக இருக்குமாறும், உதவி தேவைப்பட்டால் இந்திய தூதரக அதிகாரிகளை தொடர்பு கொள்ளுமாறும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

இந்த நிலையில் மேகாலயா மாநிலத்தைச் சேர்ந்த தேசிய மக்கள் கட்சி(என்.பி.பி.) எம்.பி. வான்வெய்ராய் கார்லுக்கி, இஸ்ரேலில் தனது குடும்பத்துடன் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேகாலயாவில் இருந்து வான்வெய்ராய் கார்லுக்கி எம்.பி., அவரது மனைவி, மகள் உள்பட மொத்தம் 24 பேர் பெத்லகேம் நகருக்கு புனித பயணம் மேற்கொண்டனர்.

இந்நிலையில் இஸ்ரேலில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக அவர்கள் அங்கிருந்து இந்தியா திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து மேகாலயா முதல்-மந்திரியும், என்.பி.பி. கட்சி தலைவருமான கான்ராட் சங்க்மா கூறுகையில், வான்வெய்ராய் கார்லுக்கி எம்.பி.யிடம் மத்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் தொடர்பு கொண்டு பேசியதாகவும், அவர்களை விரைவில் மீட்டு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.


Next Story