மும்பை: கடற்படை மாலுமி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை


மும்பை: கடற்படை மாலுமி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
x

இந்திய கடற்படை மாலுமி கப்பலில் பணிபுரியும் போது துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மும்பை,

இந்திய கடற்படை மாலுமி (வயது 25) ஒருவர் கடற்படை கப்பலில் பணிபுரியும் போது தனது சர்வீஸ் ரைபிளை பயன்படுத்தி தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். நேற்று பிற்பகலில் இந்த சம்பவம் நடந்துள்ளது. மாலுமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மாலுமி கப்பலில் பணியிலிருந்தபோது தற்கொலை செய்துகொண்டதாக போலீசார் தெரிவித்தனர். தற்கொலைக்கான காரணம் இன்னும் தெரியவில்லை. இந்த நிலையில் மாலுமியின் தற்கொலை குறித்து விசாரணை நடத்த இந்திய கடற்படை உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து மும்பையின் கொலாபா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story