காலை நடைபயிற்சிக்கு சென்றபோது கார் மோதி ஐடி நிறுவன தலைவி பலி - அதிர்ச்சி சம்பவம்


காலை நடைபயிற்சிக்கு சென்றபோது கார் மோதி ஐடி நிறுவன தலைவி பலி - அதிர்ச்சி சம்பவம்
x

நடைபயிற்சிக்கு சென்றபோது கார் மோதி ஐடி நிறுவன தலைவி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை,

மராட்டிய மாநிலம் மும்பையின் தாதர் மதுங்கா பகுதியை சேர்ந்தவர் ராஜலெட்சுமி ராம கிருஷ்ணன் (வயது 42). இவர் மும்பையில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தின் தலைவியாக செயல்பட்டு வருகிறார்.

உடற்பயிற்சி மீது மிகுந்த ஆர்வம் கொண்ட ராஜலெட்சுமி தினமும் காலையில் மும்பையில் லொர்லி சி பேஸ் சாலையில் நடைபயிற்சிக்கு செல்வது வழக்கம்.

அந்தவகையில் ராஜலெட்சுமி இன்று வாரவிடுமுறை நாள் என்பதால் வழக்கம்போல காலை 6.30 மணியளவில் லொர்லி சி பேஸ் சாலையில் நடைபயிற்சிக்கு சென்றுள்ளார். அப்போது, சாலையில் வேகமாக வந்த கார் ராஜலெட்சுமி மீது மோதியது.

இந்த சம்பவத்தில் தூக்கி வீசப்பட்ட ராஜலெட்சுமி படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் ராஜலெட்சுமி மீது காரை மோதிய காரி டிரைவர் சுமிர் மெர்செண்ட் (வயது 23) என்ற நபரை கைது செய்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.


Next Story