விவசாயியை ஓட ஓட விரட்டி 42 முறை கத்தியால் குத்திய தொழிலாளி


விவசாயியை ஓட ஓட விரட்டி 42 முறை கத்தியால் குத்திய தொழிலாளி
x

மத்தூர் தாலுகா அலுவலகத்தில் விவசாயி ஒருவரை வாலிபர் ஒருவர் ஓட ஓட விரட்டி சென்று கத்தியால் 42 முறை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மண்டியா:

மத்தூர் தாலுகா அலுவலகத்தில் விவசாயி ஒருவரை வாலிபர் ஒருவர் ஓட ஓட விரட்டி சென்று கத்தியால் 42 முறை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்விரோத தகராறு

மண்டியா மத்தூர் தாலுகா சஹாரிகா கிராமத்தை சேர்ந்தவர் சென்னராஜ் (வயது 45). விவசாயி. அதே பகுதியை சேர்ந்தவர் நந்தன். கூலி தொழிலாளி. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சென்னராஜின் மகளை நந்தன் மற்றும் அவரது நண்பர்கள் சிலர், வாலிபர் ஒருவருக்கும் திருமணம் செய்து வைத்தனர். இது சென்னராஜிற்கு பிடிக்கவில்லை. இதனால் கோபம் அடைந்த அவர் நந்தன் உள்பட சிலர் மீது மத்தூர் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து நந்தனிடம் விசாரித்தனர். இது நந்தனுக்கு பிடிக்கவில்லை. முன்விரோதமாக மாறியது. மேலும் நந்தன், சென்னராஜை கொலை செய்ய திட்டமிட்டார்.

இந்நிலையில் நேற்று சென்னராஜ் மத்தூர் தாலுகா அலுவலகத்திற்கு விவசாய பத்திரம் ஒன்றை சரிபார்ப்பதற்காக சென்றிருந்தார். அப்போது அங்கு காத்திருந்த நந்தன், சென்னராஜிடம் தகராறில் ஈடுபட்டார். பின்னர் நந்தன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சென்னராஜை தாக்க முயற்சித்தார். அதை பார்த்து பதற்றம் அடைந்த சென்னராஜ், நந்தனிடம் இருந்து தப்பி செல்வதற்காக அங்கிருந்து ஓடினார். ஆனால் நந்தன் விடவில்லை. பின்தொடர்ந்து துரத்தி சென்றார்.

42 முறை கத்தி குத்து

பின்னர் தாலுகா அலுவலக வளாகத்தில் சென்னராஜை மடக்கிய, நந்தன் கையில் வைத்திருந்த கத்தியால் சரமாரியாக குத்தினார். சுமார் 42 முறை குத்தியதாக கூறப்படுகிறது. இதில் சென்னராஜின் கழுத்து, நெஞ்சு, தோள்பட்டை ஆகிய இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. இதை பார்த்த தாலுகா அலுவலகத்தில் இருந்த பொதுமக்கள் சென்னராஜை மீட்க முயற்சித்தனர். ஆனால் நந்தன் அவர்களை நெருங்க விடவில்லை. மாறாக கையில் வைத்திருந்த மிளகாய் பொடியை பொதுமக்கள் மீது வீசினார்.

இதனால் அனைவரும் பதற்றம் அடைந்தனர். இதையடுத்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் நந்தனை மடக்கி பிடித்து கைது செய்தனர். அப்போது சிலர் நந்தனை தாக்கியதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து நந்தனை மத்தூர் அரசு ஆஸ்பத்திரியிலும், சென்னராஜை மிம்ஸ் ஆஸ்பத்திரியிலும் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர விசாரணைக்கு அளிக்கப்பட்டு வருகிறது.

தொழிலாளி கைது

இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள மத்தூர் போலீசார் நந்தனை கைது செய்திருப்பதாகவும், விரைவில் அவரிடம் விசாரணை நடத்தப்படும் என்று கூறியுள்ளனர். இந்த கத்தி குத்து சம்பவத்தால் மத்தூர் தாலுகா அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story