மாரத்தஹள்ளி ஏரியில், 13 நாட்களுக்கு முன்பு ஆண் பிணம் மீட்கப்பட்ட வழக்கில் துப்பு கிடைக்காமல் திணறும் போலீசார்


மாரத்தஹள்ளி ஏரியில், 13 நாட்களுக்கு முன்பு ஆண் பிணம் மீட்கப்பட்ட வழக்கில் துப்பு கிடைக்காமல் திணறும் போலீசார்
x

13 நாட்களுக்கு முன்பு மாரத்தஹள்ளி ஏரியில் ஆண் பிணம் மீட்கப்பட்ட வழக்கில் துப்பு கிடைக்காமல் பெங்களூரு போலீசார் திணறி வருகிறார்கள். இதுகுறித்து விசாரணை நடத்துவதற்காக தமிழகத்திற்கு 2 தனிப்படை போலீசார் சென்றுள்ளனர்.

பெங்களூரு:

13 நாட்களுக்கு முன்பு மாரத்தஹள்ளி ஏரியில் ஆண் பிணம் மீட்கப்பட்ட வழக்கில் துப்பு கிடைக்காமல் பெங்களூரு போலீசார் திணறி வருகிறார்கள். இதுகுறித்து விசாரணை நடத்துவதற்காக தமிழகத்திற்கு 2 தனிப்படை போலீசார் சென்றுள்ளனர்.

கழுத்தை நெரித்து...

பெங்களூரு மாரத்தஹள்ளி பகுதியில் ஏரி ஒன்று உள்ளது. இந்த ஏரியில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் மிதந்தது. அந்த வழியாக வந்தவர்கள் அதைக்கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் இதுகுறித்து மாரத்தஹள்ளி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் ஏரியில் மிதந்த ஆண் பிணத்தை மீட்டனர். மேலும் அதை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.

அப்போது ஏரியில் பிணமாக மிதந்தவருக்கு 25 முதல் 30 வயதுக்குள் இருக்கும் எனவும், அவர் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதும், பின்னர் அவரது உடல் ஏரியில் வீசப்பட்டதும் தெரிந்தது. ஆனால் அவர் யார், எந்த பகுதியை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. அதே சமயம் அவரது கையில் தமிழில் பச்சை குத்தப்பட்டு இருந்தது. அப்போது தான் அவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்பது தெரிந்தது. ஆனால் அவர் எதற்காக கொலை செய்யப்பட்டார், கொலையாளிகள் யார் என்பது தெரியவில்லை.

தமிழகம் விரைந்தனர்

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு 13 நாட்கள் ஆகியும் இதுவரை எந்த துப்பும் கிடைக்கவில்லை என்பதால், இந்த கொலை வழக்கு பெங்களூரு போலீசாருக்கு பெரும் சவாலாக உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே அவரது கையில் தமிழில் பச்சை குத்தப்பட்டதையடுத்து, உயிரிழந்தவரின் புகைப்படத்துடன் கூடிய நோட்டீஸ்களை தமிழகம் மற்றும் பெங்களூருவின் பல்வேறு பகுதிகளில் ஒட்டும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதில் 2 தனிப்படை போலீசார் குழு, விசாரணை நடத்துவதற்காக தமிழகம் விரைந்துள்ளனர். அவர்கள் தமிழகத்தில் உள்ள சில குறிப்பிட்ட பச்சை குத்தும் கடைகளில் விசாரணை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் உயிரிழந்தவர் குறித்து யாரும் இதுவரை தேடி வராத நிலையில், குடும்ப பிரச்சினையில் அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அந்த கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story