காங்கிரஸ், பா.ஜனதா சார்பில் போட்டியிட்டு 4 முறை எம்.பி. ஆன மைசூரு மன்னர்


காங்கிரஸ், பா.ஜனதா சார்பில் போட்டியிட்டு 4 முறை எம்.பி. ஆன மைசூரு மன்னர்
x

காங்கிரஸ், பா.ஜனதா சார்பில் போட்டியிட்டு 4 முறை எம்.பி. ஆன மைசூரு மன்னர் ஒருமுறை கூட மத்திய மந்திரி பதவியில் அமராதது பற்றிய தகவல் வெளியாகி இருக்கிறது.

மைசூரு:

கர்நாடக சட்டசபைக்கு அடுத்த மாதம்(மே) 10-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் 4 முறை நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்று மத்திய மந்திரி பதவி கிடைக்காத மைசூரு மன்னரைப் பற்றி இங்கு காண்போம்.

மைசூரு மன்னராக இருந்த ஸ்ரீகண்டதத்த நரசிம்மராஜ உடையார் தான் 4 முறை நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்றும் மந்திரி பதவி கிடைக்காமல் இருந்தவர் ஆவார். கடந்த 1984-ம் ஆண்டு முதன் முதலாக காங்கிரஸ் சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட மறைந்த மன்னர் ஸ்ரீகண்டதத்த நரசிம்மராஜ உடையார் அத்தேர்தலில் 2 லட்சத்து 47 ஆயிரத்து 754 வாக்குகள் பெற்று வெற்றி அடைந்தார். பின்னர் 1989-ம் ஆண்டும் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு 3 லட்சத்து 84 ஆயிரத்து 888 வாக்குகள் பெற்று வெற்றிக்கனியை பறித்தார். 1991-ம் ஆண்டு பா.ஜனதா சார்பில் போட்டியிட்ட அவர் 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். பின்னர் மீண்டும் 1996-ம் ஆண்டும், 1999-ம் ஆண்டும் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இவ்வாறு 4 முறை நாடாளுமன்றத்துக்கு சென்ற அவர் ஒருமுறை கூட மத்திய மந்திரியாகவில்லை. அவருக்கு மத்திய மந்திரி பதவி கடைசி வரைக்கும் வழங்கப்படவில்லை. கடைசியாக அவர் 2004-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.


Next Story