மைசூரு மாநகராட்சியில் ரூ.905 கோடியில் பட்ஜெட் தாக்கல்


மைசூரு மாநகராட்சியில் ரூ.905 கோடியில் பட்ஜெட் தாக்கல்
x

மைசூரு மாநகராட்சியில் ரூ.905 கோடியில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதனை நிதிக்குழு தலைவர் ஆர்.நாகராஜூ தாக்கல் செய்தார்.

மைசூரு:

மைசூரு மாநகராட்சியில் ரூ.905 கோடியில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதனை நிதிக்குழு தலைவர் ஆர்.நாகராஜூ தாக்கல் செய்தார்.

மாநகராட்சி பட்ஜெட் தாக்கல்

மைசூரு மாநகராட்சியின் 2023-24-ம் நிதி ஆண்டின் பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. மைசூரு மாநகராட்சி தலைைம அலுவலகத்தில் நடந்த பட்ஜெட் தாக்கலில் மேயர் சிவகுமார், துணை மேயர் ரூபா, மாநகராட்சி கமிஷனர் லட்சுமி காந்தா ரெட்டி, எம்.எல்.ஏ.க்கள் ஹரிஷ் கவுடா, ஸ்ரீ வத்ஷா, மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். மாநகராட்சி நிதி நிலைக்குழு தலைவர் ஆர்.நாகராஜூ 2023-2024-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மைசூரு மாநகராட்சியில் 2023- 24-ம் ஆண்டுக்கான பட்ஜெட் ரூ.905,14 கோடி தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மாநகராட்சிக்கு சொத்து வரி மூலம் ரூ.171.75 கோடியும், தொழில் செய்வதற்கான உரிமை கட்டணம் ரூ.10 கோடியும், மைசூரு மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களில் உள்ள வாடகை கடைகள் மூலம் ரூ.2 கோடியே 99 லட்சத்து 55 ஆயிரமும் மாநகராட்சிக்கு வருமானமாக வருகின்றன.

நிதி ஒதுக்கீடு

மாநகராட்சியில் புதியதாக நீச்சல் குளங்கள் உருவாக்கப்படும். மாநகராட்சியில் வார்டுக்கு ஒரு நூலகங்கள் புதியதாக அமைக்கப்படும். கபினி குடிநீர் வினியோக திட்டம் மக்களுக்கு சீரான தண்ணீர் வழங்கப்படும். தூய்மை பணியாளர்களுக்கு ஓய்வு அறைகள் அமைக்கப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய திட்டங்கள் கொண்டு வரப்படும். பட்ஜெட்டில் பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். பட்ஜெட் தாக்கலையொட்டி மாநகராட்சி அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.


Next Story