காஷ்மீரில் அமைதியை கொண்டு வருவதில் பாஜக அரசு தோல்வி; ராஜஸ்தான் முதல்-மந்திரி குற்றச்சாட்டு


காஷ்மீரில் அமைதியை கொண்டு வருவதில் பாஜக அரசு தோல்வி; ராஜஸ்தான் முதல்-மந்திரி குற்றச்சாட்டு
x

காஷ்மீர் அமைதியை கொண்டு வருவதில் பாஜக அரசு தோல்வியடைந்துவிட்டது என்று ராஜஸ்தான் முதல்-மந்திரி தெரிவித்துள்ளார்.

ஜெய்ப்பூர்,

ஜம்மு-காஷ்மீரில் சிறுபான்மையாக உள்ள இந்து, சீக்கியம் உள்ளிட்ட மதத்தினரை குறிவைத்து கடந்த சில நாட்களாக பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

இதற்கிடையில், காஷ்மீரின் குல்காம் மாவட்டம் கோபால்புரா பகுதியில் உள்ள அரசு பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக பணியாற்றி வந்த ராஜ்னி பாலா (வயது 36) பள்ளி வளாகத்தில் வைத்து கடந்த 31-ம் தேதி பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார். இவர் இந்து மதத்தை (காஷ்மீரி பண்டிட்) சேர்ந்தவராகவார்.

இந்நிலையில், இதேபோன்ற சம்பவம் இன்றும் அரங்கேறியுள்ளது. காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் உள்ள வங்கியில் மேலாளராக பணியாற்றி வந்த ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த விஜயகுமார் பயங்கரவாதியால் இன்று சுட்டுக்கொல்லப்பட்டார். விஜய் குமார் இந்து மதத்தை சேர்ந்தவராவார். வங்கிக்குள் பணியாற்றிக்கொண்டிருந்த விஜய் குமார் மீது அங்கு வந்த பயங்கரவாதி தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டான். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், காஷ்மீரில் பயங்கரவாதியால் வங்கி மேலாளர் விஜய் குமார் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கெலாட் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ஜம்மு-காஷ்மீரில் குல்காமில் வங்கி மேலாளராக பணியாற்றி வந்த ராஜஸ்தானை சேர்ந்த விஜய் குமார் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டது கண்டனத்திற்குரியது.

காஷ்மீரில் அமைதியை கொண்டுவருவதில் பாஜக அரசு தோல்வியடைந்துவிட்டது. காஷ்மீரில் பொதுமக்கள் பாதுகாப்பை மத்திய அரசு உறுதி செய்யவேண்டும்' என்றார்.



1 More update

Next Story