பிரதமர் மோடியின் இல்லத்தில் தேநீர் விருந்து


பிரதமர் மோடியின் இல்லத்தில் தேநீர் விருந்து
x

மத்திய அமைச்சரவையில் இடம்பெற உள்ள எம்.பி.க்களுக்கு மோடி தேநீர் விருந்து அளித்தார்.

புதுடெல்லி,

ஜனாதிபதி மாளிகையில் இன்று இரவு 7.15 மணிக்கு பிரதமராக மோடி பதவியேற்கும் கோலாகல விழாவில், அவரது தலைமையில் புதிய மந்திரிசபை பதவி ஏற்கிறது. இந்தநிலையில், நரேந்திரமோடி தனது இல்லத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியைச்சேர்ந்தோருக்கு தேநீர் விருந்து அளித்தார். மத்திய மந்திரிகளாக பதவியேற்க இருக்கும் எம்.பிக்களும் பிரதமரின் தேநீர் விருந்தில் பங்கேற்றனர்.

100 நாள் செயல்திட்டம் குறித்து புதியதாக தேந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்களுக்கு நரேந்திர மோடி ஆலோசனை வழங்கியதாகவும் மக்களுக்கு சேவையாற்ற எம்.பி.க்களுக்கு அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. 50க்கும் மேற்பட்டோர் மத்திய மந்திரிகளாக பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

1 More update

Next Story