ராகுல்காந்தியிடம் எதற்காக 40 மணி நேரம் விசாரணை நடத்த வேண்டும்?; டி.கே.சிவக்குமார் கேள்வி


ராகுல்காந்தியிடம் எதற்காக 40 மணி நேரம் விசாரணை நடத்த வேண்டும்?; டி.கே.சிவக்குமார் கேள்வி
x

டி.கே.சிவக்குமார்

ராகுல்காந்தியிடம் எதற்காக 40 மணி நேரம் விசாரணை நடத்த வேண்டும்? என்று டி.கே.சிவக்குமார் கேள்வி எழுப்பி உள்ளார்.

பெங்களூரு:

கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

அகில இந்திய காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி, முன்னாள் தலைவர் ராகுல் காந்தியிடம் அரசியல் பழிவாங்கும் நோக்கத்தில் அமலாக்கத்துறை மூலம் மத்திய அரசு விசாரணை நடத்துகிறது. எங்கள் கட்சி தலைவர்களுக்கு ஆதரவாக நாங்கள் இருக்கிறோம். கடினமான நேரத்தில் அவர்களுக்கு தைரியம் கூற வேண்டும் என்ற நோக்கத்தில் நான் டெல்லி வந்துள்ளேன். எங்கள் கட்சியின் அனைத்து எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.எல்.சி.க்களை டெல்லி வரும்படி உத்தரவிட்டுள்ளோம். ராகுல் காந்தியிடம் 40 மணி நேரம் விசாரணை நடத்த வேண்டிய அவசியம் என்ன?. இதில் சதித்திட்டம் அடங்கியுள்ளது. எல்லாவற்றையும் எதிர்கொள்ள ராகுல் காந்தி தயாராக உள்ளார். சோனியா காந்தி வருகிற 23-ந் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று அமலாக்கத்துறை நோட்டீசு அனுப்பியுள்ளது. விசாரணையை கண்டு நாங்கள் அஞ்ச மாட்டோம்.

இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.


Next Story