இஸ்லாமிய மதத்தவர் எவரும் எந்த மதத்திற்கு எதிராகவும் செயல்பட்டதில்லை - பரூக் அப்துல்லா


இஸ்லாமிய மதத்தவர் எவரும் எந்த மதத்திற்கு எதிராகவும் செயல்பட்டதில்லை - பரூக் அப்துல்லா
x

இஸ்லாமிய மதத்தவர் எவரும் எந்த மதத்திற்கு எதிராகவும் செயல்பட்டதில்லை என்று பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

ஸ்ரீநகர்,

ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரியும், தேசிய மாநாட்டு கட்சி தலைவருமான பரூக் அப்துல்லா காஷ்மீரில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

அப்போது செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், பஹல்கம் பகுதியை சேர்ந்த ஒரு இஸ்லாமிய மதத்தவர் தான் அமர்நாத் குகையில் சிவலிங்கம் இருப்பதை முதலில் பார்த்தார். பின்னர் அவர் இது குறித்து காஷ்மீரி பண்டிட்களுக்கு தெரிவித்தார். இஸ்லாமிய மதத்தவர் எவர்ய்ன் எந்த மதத்திற்கு எதிராகவும் செயல்பட்டதில்லை. ஆம். 1990 வாக்கில் பெரிய அலை வந்தது (பயங்கரவாத தாக்குதல்கள்). ஆனால், அது வேறு பகுதியில் இருந்து வந்தது' என்றார்.


Next Story