ஒடிசா: வறுமை காரணமாக பிறந்த பெண்குழந்தையை 7 ஆயிரம் ரூபாய்க்கு விற்ற பெற்றோர்..!


ஒடிசா: வறுமை காரணமாக பிறந்த பெண்குழந்தையை 7 ஆயிரம் ரூபாய்க்கு விற்ற பெற்றோர்..!
x

ஒடிசா மாநிலத்தில் வறுமை காரணமாக 7 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்ட பெண்குழந்தையை போலீசார் மீட்டனர்.

ஜாஜ்பூர்,

ஒடிசா மாநிலம் ஜாஜ்பூர் மாவட்டத்தில் வறுமை காரணமாக 7 ஆயிரம் ரூபாய்க்கு பெற்றோரால் விற்கப்பட்ட பெண்குழந்தையை போலீசார் மீட்டனர்.

தசரத்பூர் பிளாக்கின் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அதிகாரி ஒருவர், சுரேஷ் தாஸ் மற்றும் அவரது மனைவி இருவரும் பிறந்த சில நாட்களே ஆன தங்களது பெண்குழந்தையை 7 ஆயிரம் ரூபாய்க்கு குழந்தை இல்லாத தம்பதிக்கு விற்றதாக போலீசில் புகார் தெரிவித்தார். இதையடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் குழந்தை இருக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து விற்கப்பட்ட பெண் குழந்தையை போலீசார் சம்பேபால் கிராமத்தில் இருந்து மீட்டு குழந்தைகள் நலக் குழுவிடம் ஒப்படைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. இதுகுறித்து குழந்தையின் பெற்றோர் கூறுகையில், "நாங்கள் மிகவும் ஏழ்மையானவர்கள். ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். எனவே பிறந்த குழந்தையை எங்கள் உறவினர் ஒருவருக்குக் கொடுக்க முடிவு செய்தோம். நாங்கள் குழந்தையை விற்கவில்லை " என மறுப்பு தெரிவித்துள்ளனர்.


Next Story