மும்பையில் ரூ.60 லட்சம் மதிப்பிலான போதைப்பொருட்களுடன் நைஜீரிய நாட்டைச் சேர்ந்த நபர் கைது


மும்பையில் ரூ.60 லட்சம் மதிப்பிலான போதைப்பொருட்களுடன் நைஜீரிய நாட்டைச் சேர்ந்த நபர் கைது
x
தினத்தந்தி 20 May 2022 4:14 PM IST (Updated: 20 May 2022 4:15 PM IST)
t-max-icont-min-icon

பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு சுமார் 60 லட்சம் ரூபாய் என்று போதைப்பொருள் தடுப்பு பரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.

மும்பை,

மராட்டிய மாநிலத்தின் தலைநகர் மும்பையில் உள்ள கோரேகான் பகுதியில் போதைப்பொருள் தடுப்பு பரிவு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், நைஜீரிய நாட்டைச் சேர்ந்த போதைப்பொருள் வியாபாரியை அவர்கள் கைது செய்தனர்.

அந்த நபரிடம் இருந்து 400 கிராம் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், அதன் மதிப்பு சுமார் 60 லட்சம் ரூபாய் என்றும் போதைப்பொருள் தடுப்பு பிரிவு டி.சி.பி. தத்தா நலவாடே தெரிவித்துள்ளார். அந்த நபரின் மீது வழக்குப்பதிவு செய்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Nigerian man arrested in Mumbai with drugs worth Rs 60 lakhNigerian man arrested in Mumbai with drugs worth Rs 60 lakhஇதே போல் ஏற்கனவே கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி மும்பையின் மலாட் பகுதியில், 5 பிலாஸ்டிக் பைகளில் சுமார் ரூ.1.12 கோடி மதிப்பிலான 750 கிராம் போதைப்பொருளுடன், நைஜீரிய நாட்டைச் சேர்ந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story