ஜி20 நாடுகள் சபை கூட்டத்தில் கிரிப்டோகரன்சி குறித்து அமெரிக்காவுடன் பேச்சு; மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தகவல்


ஜி20 நாடுகள் சபை கூட்டத்தில் கிரிப்டோகரன்சி குறித்து அமெரிக்காவுடன் பேச்சு; மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தகவல்
x

ஜி20 நாடுகள் கூட்டத்தில் கிரிப்டோகரன்சி குறித்து அமெரிக்காவுடன் பேசப்பட்டதாக மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு:

ஜி20 நாடுகள் கூட்டத்தில் கிரிப்டோகரன்சி குறித்து அமெரிக்காவுடன் பேசப்பட்டதாக மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க செயலாளருடன் ஆலோசனை

ஜி20 நாடுகள் சபையின் நிதித்துறை துணை மந்திரிகள், ரிசர்வ் துணை கவர்னர்கள் கூட்டம் பெங்களூருவில் நேற்று முன்தினம் தொடங்கியது. இந்த கூட்டத்தை மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் விளையாட்டு துறை மந்திரி அனுராக் தாக்கூர் தொடங்கி வைத்தார். இந்த நிலையில், 2-வது நாளாக நேற்றும் பெங்களூருவில் ஜி20 நாடுகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 7 நாடுகளை சேர்ந்த நிதி மந்திரிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார். 7 நாடுகளை சேர்ந்த நிதி மந்திரிகளுடன் நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்தினார். குறிப்பாக அமெரிக்க நாட்டு நிதித்துறை செயலாளர் ஜனட் எல்லேனுடன் நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்தினார்.

கிரிப்டோ கரன்சி குறித்து...

இதுகுறித்து நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், 'அமெரிக்க நாட்டு நிதித்துறை செயலாளர் ஜனட் எல்லேனுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. இதில், வளர்ச்சி அடைந்த வங்கிகள், கடன் விவகாரங்கள், கிரிப்டோகரன்சி குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது' என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஜி20 நாடுகளின் கூட்டத்தில் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் நிலக்கரி உற்பத்தி, பயன்பாட்டில் இருந்து ஒதுங்குவதால் பொருளாதார பிரச்சினை ஏற்படுவது குறித்தும், நிதி ஒதுக்குவது குறித்தும் விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.


Next Story