'பீகாரில் விரைவில் நிதீஷ் குமாரின் ஆட்சி கவிழும்' - அமித்ஷா சூளுரை


பீகாரில் விரைவில் நிதீஷ் குமாரின் ஆட்சி கவிழும் - அமித்ஷா சூளுரை
x

நாடாளுமன்ற தேர்தலின் போது பீகார் முழுவதும் தாமரை மலரப்போவதாக அமித்ஷா தெரிவித்தார்.

பாட்னா,

பீகார் மாநிலத்திற்கு 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமித்ஷா, அங்கு நடைபெற்ற பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது மீண்டும் நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி அமைப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை என்று அவர் கூறினார்.

அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது பீகார் முழுவதும் தாமரை மலரப்போவதாக தெரிவித்த அவர், அதன் பிறகு பீகாரில் நிதீஷ் குமார் தலைமையிலான ஆட்சி கவிழும் என்று சூளுரைத்தார். மேலும் நிதீஷ் குமார் ஒரு நாளும் பிரதமராகப் போவது இல்லை என்றும் தேஜஸ்வி யாதவ் ஒருநாளும் முதல்-மந்திரியாகப் போவது இல்லை என்றும் விமர்சித்த அமித்ஷா, ராஷ்டிரிய ஜனதா கட்சியின் அமைச்சர்கள் பா.ஜ.க.வின் கதவை தட்டி வருவதாக குறிப்பிட்டார்.



Next Story